tamil cinema:திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிய போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தனர்.
இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுகுறித்து தனுசின் தந்தையும், டைரக்டருமான கஸ்தூரிராஜா கூறியதாவது, தனுசும், ஐஸ்வர்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக சண்டை போட்டுக் கொண்டுள்ளார்கள்.
இது, கணவன், மனைவிக்கு இடையே நடக்கும் வழக்கமான குடும்ப சண்டைதான். விவாகரத்து இல்லை. இரண்டு பேருமே தற்போது சென்னையில் இல்லை. ஐதராபாத்தில் உள்ளார்கள். நான் போனில் தொடர்புகொண்டு பேசினேன். இருவருக்கும் சில அறிவுரைகளை கூறியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
-vndau.jpeg)