6 October, 2022

சிங்கிள்னு சொல்லிட்டு திரிஞ்சிங்களே.. வருங்கால மனைவியா..? புகழ் கொடுத்த சர்ப்ரைஸ்

tamil cinema:விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி.இதில் கோமாளியாக கலந்து கொண்டு பெருமளவில் பிரபலமானவர் புகழ். தனது காமெடியான பேச்சால், செயலால் அவர்  ரசிகர்களின் மனதை பெருமளவில் கவர்ந்தார்.

அவர் அதிகமாக பெண் வேடமிட்டு நடித்து அனைவரையும் ரசிக்க வைப்பார். புகழுக்கு தற்போது வெள்ளித்திரையிலும் ஏராளமான பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. அவர் ஹெச் வினோத் இயக்கத்தில், அஜித் நடித்துள்ள வலிமை படத்திலும் நடித்துள்ளார்.

tamil cinema

tamil cinema

இதற்கிடையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் புகழ் பெண் ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ஹாப்பி பர்த்டே பார்ட்னர்.. லவ் யூ என்று பதிவிட்டுள்ளார்.

Share