விஷால் ரசிகர்களுக்கு விருந்து..இன்று மாலை வெளியாகும் சூப்பர் அப்டேட்!

”மார்க் ஆண்டனி” திரைப்படம் மூலம் மாஸ் காட்டிய நடிகர் விஷாலின் அடுத்த திரைப்படத்தின் அப்டேட் இன்று வெளியாகிறாது.இது குறித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.இது விஷாலின் 34வது திரைப்படம் என்பது குறிப்பிட படவேண்டியது. ஸ்டோன் பெஞ்சர்ஸ் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் இணைந்து தாயாரிக்கும் படத்தை இயக்குநர் ஹரி இயக்குகிறார். இது இவர்களது மூன்றாவது கூட்டணியாகும் இதற்கும் முன்னர் தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களில் விஷால் மற்றும் ஹரி ஒன்றாக பணியாற்றியுள்ளனர்.

இந்த நிலையில் விஷால்34 படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5மணிக்கு வெளியாகும் என அறிவித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் துப்பாக்கியை யாரோ பிடித்திருப்பது போல தெரிகிறது. அந்த துப்பாக்கியின் முனையில் டாக்டர்கள் பயன்படுத்தும் ஸ்டெதஸ்கோப் உள்ளது. தொடர்ந்து இது படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் ஆக‌ இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.