செம்பு ரொம்ப அடி வாங்கிருக்கு போல..!கொசுவலை உடையில் ரம்யா பாண்டியன் கலாய்த்த ரசிகர்கள்..

பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட்டாக வெள்ளை நிற உடையை அணிந்து கொண்டு வித விதமாக போஸ் கொடுத்து வெளியிட்ட போட்டோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.இவர் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும்.பிக்பாஸ் சீசன்4 மூலமே பிரபலமானார் என்பது அனைவரும் அறிந்ததே.. பிக்பாஸ் சீசன்4ல் வெற்றி பெறாமல் விட்டாலும் இறுதி வரை போட்டியில் இருந்தவர் ஆவார். இதனாலேயே ரசிகர்கள் இவரை தலைவி என்று அழைக்கின்றனர்.


ஜோக்கர், ஆண் தேவதை, இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும், நண்பகல் நேரத்து மயக்கம் என பல படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன் அடுத்தடுத்தும் பெரிய படங்களில் நடிக்க முயற்சித்து வருகிறார்.
சிறிது காலம் படவாய்ப்புகள் எதுவும் கிடைக்காவிட்டாலும்.சோஷியல் மீடியாக்களில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.இதில் மொட்டை மாடியில் இவர் நடத்திய இடுப்பு மடிப்பு போட்டோஷூட் ஓவர் நைட்டில் இந்தியளவில் டிரெண்டானது.

அதன் பின் படவாய்ப்புகள் அதிகம் கிடைத்தது.அதன் பின் பிரபல பிளேபாய் கேமராமேன் எல். ராமசந்திரன் உடன் சேர்ந்து ஏகப்பட்ட கவர்ச்சி போட்டோஷூட்களை ரம்யா பாண்டியன் நடத்தி வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்களை அதிகரித்தார்.இது இப்படி இருக்க சமீபமாக ரம்யா பாண்டியன் வெள்ளை ஆடையில் போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இது பார்ப்பதற்கு கொசுவலை ஆடை போல் உள்ளதால் ரசிகர்கள் தங்களது கமெண்ட்களை கலாய்த்து போட்டு வருகிறார்கள்.

மம்மூட்டியுடன் நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படத்தில் நடித்த ரம்யா பாண்டியன் அடுத்ததாக பிரஜின் நடிப்பில் உருவாகி வரும் இடும்பன்காரி படத்தில் நடித்து வருகிறார். ஷிவதா, அனுபமா குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் அந்த படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.