15 வயது சிறுமி தற்கொலை முயற்சியா..?பாணந்துறையில் திகில் சம்பவம்..

பாணந்துறை கடற்கரைக்கு வந்த 15 வயது சிறுமி ஒருவர் கடலில் அடித்து செல்லப்பட்ட போது பாணந்துறை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் மீட்கப்பட்டார்.
பாணந்துறை பொலிஸ் பிரிவினை சேர்ந்த அதிகாரிகளான நிமல்சிறி மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் 91046 தசுன் ஆகியோர் விரைவாக‌ செயற்பட்டு சிறுமியின் உயிரைக் காப்பாற்றியதாக பொலிஸ் அலுவலகம்  செய்தி ஒன்றை தெரிவித்துள்ளது.

மேலும் விசாரணை செய்யும் போது இந்த சிறுமி கொஸ்பலான பிரதேசத்தினை சேர்ந்தவர் என தெரியவருகிறது.சிறுமியின் பெற்றோரிடம் ஒப்படைத்து விசரணை செய்தபோது 15 வயது கொண்ட அந்த சிறுமி தற்கொலை செய்யும் நோக்குடனே தான் கடலில் விழுந்ததாக சொல்கிறார்.மேலும் தற்கொலை செய்ததற்கான நோக்கம் என்னவென்று பொலிசார் விசாரித்து வருகின்றனர்.