தொலைபேசி, இணையம் மற்றும் தொலைக்காட்சி சேவைக் கட்டணங்கள் மீண்டும் அதிகரிப்பு..!

VAT வரி அதிகரிப்புக்கு ஏற்ப ஜனவரி மாதம் முதல் கையடக்க தொலைபேசி, நிலையான தொலைபேசி, இணையம் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றுக்கான சேவைக் கட்டணங்கள் அனைத்தையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.குறித்த சேவைக் கட்டண திருத்தங்கள் ஜனவரி 01 முதல் அமலுக்கு வரும் என தொலைபேசி நிறுவனங்கள் அறிவித்துள்ளது.இந்த கட்டண உயர்வு குறித்து சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனங்கள் விரிவான தகவல்களையும் வெளியிட்டுள்ளன.

Read More

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது..!

இவ்வருடம் செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பல்வேறு அனர்த்தங்களினால் பணிக்கு செல்ல முடியாத அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இவ்வாறு, பல்வேறு மாகாணங்களில் மழை, வெள்ளம், மண்சரிவு, வீதித் தடைகள் போன்றவற்றால் ஏற்படும் போக்குவரத்து சிரமங்கள், இடப்பெயர்வுகள் மற்றும் அனர்த்தங்கள் காரணமாக தமது கடமை நிலையங்களுக்குத் செல்ல முடியாத அரச உத்தியோகத்தர்கள் இந்தச் சலுகையைப் பெறுகின்றனர். பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கே.டி.என்.ரஞ்சித் அசோக விடுத்துள்ள சுற்றறிக்கையில், இந்த விடுமுறையை விடுமுறையை…

Read More

நாட்டில் மூன்றாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது..!

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் நேற்று (29) உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மதவாச்சி பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுவாசக் கோளாறு காரணமாக மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.உயிரிழந்த பெண்ணுக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இலங்கையில் பதிவான மூன்றாவது கொரோனா மரணம் இதுவாகும்.

Read More

3 நாட்களாக அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சடலம்..!

தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் அறை ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.தொலைபேசி அழைப்பின் ஊடாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.40 முதல் 50 வயதுடைய ஒருவரே மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் இறந்து மூன்று நாட்கள் ஆகியிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.இது தொடர்பான விசாரணைகளுக்காக கல்கிஸ்ஸ நீதவான் அழைக்கப்பட்டதன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம்…

Read More

யானைக் காவலிற்கு சென்றவர் பரிதாபமாக உயிரிழப்பு..!

வாகரை பொலிஸார் மட்டக்களப்பு, வாகரை, கதிரவெளி சலம்பைக்குளம் வயல் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 47 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான வாகரைப் பிரதேச செயலகத்தில் சமூர்த்தி முகாமையாளராகக் கடமையாற்றிய நபரே இவ்வாறு மீட்கப்பட்ட சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர், வழமையாக வயல் காவலுக்குச் செல்பவர் என்றும் கடந்த புதனன்றும் வயல் காவலுக்குச் சென்றதாகவும் உறவினர்கள் மேலும் தெரிவித்தனர்.வழமையாக காலை வீட்டிற்க்கு இரவுக் காவல் முடிந்து வீட்டுக்கு வருபவர் அன்றைய தினம் வராததால் தந்தையை தேடி…

Read More

முகநூல் காதலியை நேரில் பார்க்க வந்தவருக்கு அதிர்ச்சி..!

நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் பேஸ்புக்கில் பெண் போல் கதைத்து நபர் ஒருவரை ஏமாற்றிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவத்தில் யாழ்ப்பாணம் – நெல்லியடியைச் சேர்ந்த இருவர் காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருகோணமலையைச் சேர்ந்த ஒருவருக்கு நெல்லியடியைச் சேர்ந்த ஒருவர் பெண் போல பழகி காதல் வலையில் வீழ்த்தி நெல்லியடிக்கு வரவழைத்துள்ளார். இந்த நம்பிக்கையில் நெல்லியடிக்கு வந்த திருகோணமலையைச் சேர்ந்த ஒருவரை கத்தியைக் காட்டி மிரட்டி பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் திருகோணமலையைச்…

Read More

வைத்தியர்கள் போல் நடித்து பெண்களை ஏமாற்றிய இரு வெளிநாட்டவர் கைது..!

நைஜீரியப் பிரஜைகள் இருவரை இலங்கை கணினி குற்றப் பிரிவினர் வைத்தியர்கள் போன்று நடித்து 3 பெண்களை ஏமாற்றிய குற்றத்திற்காக கைதுசெய்துள்ளனர்.விசாரணையில், இருவரும் மூன்று பெண்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.குறித்த நைஜீரிய பிரஜைகள் இருவரும் அளுத்கமவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நைஜீரிய பிரஜைகள் இருவரும் வைத்தியர்கள் போல் நடித்து சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பை ஏற்படுத்தி இரு பெண்களை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து பண மோசடி…

Read More

இத விட சின்ன ட்ரவுசர் இல்லையா மேடம்..!ரசிகர்களை ஏங்க வைத்த நடிகை ராஷ்மிகா!!

இந்திய சினிமாவில் இப்போது நேஷனல் க்ரஷ் என அழைக்கப்படுபவர் நடிகை ராஷ்மிகா.நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து தற்போது பாலிவுட்டிலும் சில அந்தஸ்தை பெற்றுள்ளார்.ஆரம்பத்தில் தெலுங்குப் படத்தில் கதாநாயகியாக நடித்த இவர் ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து வந்தார். இந்த காதல் திருமணம் வரை நீடித்து பின்னர் நின்றுபோனது.அதன்பிறகு தமிழ் படங்களில் கவனம் செலுத்திய ராஷ்மிகா மந்தனா, விஜயின் ‘வாரிசு’ படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில், பிரபல தெலுங்கு…

Read More

வேலைவாய்ப்பு-Office Admin (Female)

பதவி ~Office Admin இடம் ~வவுனியா வைரவபுளியங்குளம் தகமை ~A/L சித்தி ~அடிப்படை கணனி அறிவு ~ சிறந்த தொடர்பாடல் திறன். ~நகரிலிருந்து 5கிலோமீட்டர் தூரத்திற்குள் வசிப்பவர் விரும்பத்தக்கது. வயதெல்லை ~20-28 ~சம்பளம் நேரில் பேசி தீர்மானிக்கப்படும். பொருத்தமானவர்கள் கீழுள்ள தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொள்ளுங்கள். ~074 077 1235 ~0244339886

Read More

மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை..!

நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்களுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள், விரிவுரைகள் உள்ளிட்டவற்றிற்கு இன்று முதல் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் ஊடாக மாதிரி வினாக்களை விநியோகித்தல் மற்றும் மாதிரி வினாக்களை வெளியிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் அல்லது குழுக்களுக்கு…

Read More