பேருந்தில் செல்லும் பெண்களா நீங்கள்..?பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிக்கை..!

பேருந்தில் பயணித்த‌ பெண் ஒருவரின் தங்க சங்கிலியை திருடும் சிசிரீவி காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் பொலிஸாரின் விசாரனையின் போது குறித்த பெண் திக்வெல்ல பிரதேசத்தில் இருந்து பேருந்தில் ஏறியுள்ள நிலையில், அதே பேருந்தில் கந்தர பிரதேசத்தில் வைத்து மூன்று பெண்கள் ஏறியுள்ளனர் எனவும், இந்த திருட்டை அவர்களே செய்திருக்கலாம் எனவும் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும் இது குறித்து பொலிஸார்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இது குறித்து பேருந்தில் செல்லும் பெண்கள் மிகவும் அவதானமக செல்லவும்,உங்களுடைய நகைகளை மிகவும் அவதானமாக பார்த்து கொள்ளவும் என பொலிஸார் வலியுறுத்தி உள்ளனர்.