மின்னல் ரூபத்தில் வந்த எமன் உயிரிழந்த விவசாயி…!

மாத்தளை- கலேவெல பிரதேசத்தில் வயலில் உழுது கொண்டிருக்கும் போது விவசாயி ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் புலாகல பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஏ .சோமதிலக என்ற 60 வயதுடையவர் என கூறப்படுகிறது.

இவர் தனது குடும்பத்தினருடன் வயலில் உழுது கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் தொலைதூரம் நோக்கி தூக்கி வீசப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் விசாரனையின் போது மின்னல் தாக்கப்பட்டவர் கலேவெல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.