யாரோட மார்க்கெட் பெருசு..? தலைமுடியைப் பிடித்து கலவரம் செய்த நடிகைகள்..!

பிரபல நடிகைகள் ரம்பா மற்றும் லட்சுமி  ராய் ஆகிய இருவரும் படப்பிடிப்பு தளத்திலேயே ஒருவர் ஒருவருடைய முடியை பிடித்துக் கொண்டு அடித்துக்கொண்டுள்ளனர்.கடந்த 2006 ஆம் ஆண்டு ஒரு காதலன் ஒரு காதலன் என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் நடிகை ரம்பா மற்றும் ராய் லட்சுமி ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இந்தப் படத்தில் படப்பிடிப்பின் போது இருவரும் கதைப்படி நடிகை ரம்பா மற்றும் லட்சுமி ராய் என இருவரும் சேர்ந்து நடிப்பது போன்ற காட்சி.இது குறித்து படத்தின் உதவி இயக்குனர், ரம்பா மற்றும்  லட்சுமி ஆகிய இருவரிடமும் கூறியிருக்கிறார்.

ஆனால் இருவரும் ஒன்றாக ஒரு காட்சியில் சேர்ந்து நடிக்க மாட்டோம் என கண்டிப்பாக கூறி இருக்கின்றனர்.இதில் யார் முதலில் ஒன்றாக நடிக்க மாட்டேன் என்று கூறினார்கள் என்று விவரம் தெரியவில்லை. ஆனால், ஒரு கட்டத்தில் இருவருமே நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடிக்க மாட்டோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.யாரோட மார்க்கெட் பெருசு.. என்று தொடங்கிய அந்த சண்டை இறுதியில் கைகலப்பில் போய் முடிந்து இருக்கிறது. நடிகை ரம்பா மற்றும்  லட்சுமி ராய்இருவரும் ஒருவரை ஒருவர் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு சண்டை போட்டு இருக்கின்றனர்.இதனை பார்த்து அதிர்ந்து போன படக்குழுவினர் இருவரையும் சமாதானப்படுத்தி பிரித்து வைத்திருக்கின்றனர்.அதன்பிறகு இருவரையும் சேர்ந்து நடிக்க எவ்வளவோ முயற்சி செய்தும்.. காட்சியின் தன்மை குறித்து விளக்கியும்.. பயனில்லாமல் போய்விட்டது.அதன் பின்னால் வேறு வழியில்லாமல் இதுவரையும் தனித்தனியாக நடிக்க வைத்து ஒரே காட்சியில் இருப்பது போன்ற காட்சியை எடுத்து வந்திருக்கிறார்கள் படக்குழுவினர்.இந்த விஷயத்தை சமீபத்திய தன்னுடைய வீடியோ ஒன்றில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பதிவு செய்திருக்கிறார்.