16 வயதுடைய பாடசாலை மாணவி தற்கொலை..!காதலனின் மோசமான செயல்..

காதலனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தற்கொலை செய்து கொண்ட பெண் 16 வயதுடைய மாணவி என தெரிய வந்துள்ளது.இவருடைய தாயார் ஒரு வருடத்திற்கு முன்னர் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளார் எனவும்,குறித்த பெண் தனது 70 வயது பாட்டியுடன் வாழ்ந்து வருகிறார் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவர் மேலதிக வகுப்பிற்கு செல்வதாக கூறி தனது 20 வயது காதலனுடன் முச்சக்கரவண்டியில் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் தனது காதலனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.பாதிக்கப்பட்ட மாணவி இந்த சம்பவத்தை தனது தோழியிடம் கூறி தான் தற்கொலை செய்ய போவதாக குறுஞ்செய்தி ஊடாக தெரிவித்துள்ளார்.வீடு திரும்பிய மாணவி தனது பாட்டியின் மருந்துகளை உட்கொண்ட நிலையில் சுகயீனமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மாணவியின் காதலன் பொலிஸாரால் நேற்று (06) கைது செய்யப்பட்ட நிலையில் இன்று (07) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.