ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மேல் வாள் வெட்டு…!

வாள் வெட்டில் வவுனியா ஓயார்சின்னக்குளத்தை சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 


குறித்த சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் விசாரனையின் போது,நேற்றயதினம் இரவு வவுனியா ஓயார்சின்னக்குளம் பகுதிக்கு வாகனம் ஒன்றில் மதுபோதையில் சென்ற குழுவினர் அங்கு நின்ற இருவர் மீது துரத்தித்துரத்தி வாளால் வெட்டியுள்ளனர்.இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதற்கமைய வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.