துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் சென்ற நபர்..!விமான நிலையதில் பரபரப்பு…

துருக்கிக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பயணி ஒருவர் இன்று அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை சூட்கேஸில் மறைத்து வைத்திருந்த நபரையே விமான நிலைய பொலிசார் கைது செய்துள்ள‌னர்.

மினுவாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் 59 வயதுடைய அவர், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு காலை 5:30 மணியளவில் வந்தடைந்தார்.அங்கு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அவரது பொதிகளை சோதனை செய்ததில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்ட போது அங்கு பதற்றமான சூழல் நிலவியுள்ளது.