பணத்திற்க்காக குழந்தைகளை விற்ற தாய்…!

பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் தனது இரட்டைக் குழந்தைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட பெண் தனது இரட்டை குழந்தைகளை இரண்டு பேருக்கு தலா 25,000 ரூபாய்க்கு விற்ற நிலையில் இன்று காலை குழந்தைகளை வாங்கிய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் குழந்தைகளின் தாய், ஒரு குழந்தையை வாங்கிய பெண் மற்றும் மற்றைய குழந்தையை வாங்கிய பெண்ணும் என 3 பேர் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.ராகம பிரதேசத்தில் வீட்டுப் பணிப் பெண்ணாகப் பணிபுரிந்த குழந்தைகளின் தாயார், கொழும்பு காசல் மகப்பேறு வைத்தியசாலையில் ஒரு வாரத்திற்கு முன்னர் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.