வெளிநாட்டில் வேலை பெற்று தருவதாககூறி பணமோசடி செய்த பெண் கைது…!

பணங்களை பெற்று வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய பெண் ஒருவர் கைதாகியுள்ளார்.குறித்த பெண்னை இன்று (2023.12.09) நீர்கொழும்பு, நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விசாரனையில்,தென்கொரியாவில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி கந்தானை நாகொட பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் பண மோசடியில் ஈடுபட்ட நிலையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளினால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான பெண்ணுக்கு எதிராக 15 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் கூறியுள்ளனர்.