நடிகர் மதுரை மோகன் காலமானார்…!

உடல் நலக் குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் `மீசை’ மோகன் இன்று காலமானார்.விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்களும், திரையுலக நட்சத்திரங்களும் தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள். காளி வெங்கட் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.அதில்,”ஐயா நடிகர் மதுரை மோகன் அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும். ஏறத்தாழ 40 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்தவரை “முண்டாசுப்பட்டி” படத்தின்மூலம் வாய்ப்பளித்த இயக்குனர் ராம்குமார் அவர்களுக்கும்” என தெரிவித்துள்ளார்.