மர்ம முறையில் சிறுமி உயிரிழப்பு..!

சிறுமி ஒருவர் கொலன்னாவ பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


கொலன்னாவ பகுதியினை சேர்ந்த 15 வயது சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சிறுமி நேற்றுமுன் தினம் மாலையில் இருந்து காணாமல்போயிருந்த நிலையில் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அவரது மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொலன்னாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.