தொலை பேசியால் மனைவிக்கு வந்த விபரீதம்..!

மனைவியை மரக்கறிவெட்டும் கத்தியால் வெட்டிய கணவனை மொனராகலை பொலிஸ் கைதாக்கியசம்பவம் ஒன்று நடந்துள்ளது.இது மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜனஉதானகம வீடமைப்புத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.சனிக்கிழமை (10) மனைவியின் தொலைபேசிக்கு வந்த அழைப்பில் சந்தேகமடைந்த கணவன், மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காய்கறிகளை வெட்டும் கத்தியை எடுத்து வெட்டியுள்ளார்.காயமடைந்த பெண் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் குறித்த பெண் தன் குழந்தைகளை பார்க்க வீட்டிற்கு வந்துள்ளார்.கடந்த 10ம் திகதி காலை, சமையலறையில் உணவு சமைத்து கொண்டிருந்த போது, ​​அந்த பெண்ணின் தொலைபேசிக்கு அழைப்பு வந்துள்ளது. இதுகுறித்து மனைவியை அவர் கேட்டபோது, ​​முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தார். அப்போது அந்த நபர் தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மனைவியின் முகம், மார்பு மற்றும் கைகளில் கத்தியால் வெட்டியுள்ளார்.காயமடைந்த பெண் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட கணவரை மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.