ஆலயத்திற்கு உரித்தான நகை,மற்றும் பொற்காசுகளை திருடிவிற்ற பூசகர் கைது..!

ஆலய விக்கிரகத்தில் உள்ள பொற்காசு,நகைகளை திருடிவிற்றதாக பூசகர் ஒருவர் கைதாகியுள்ளார்.குறித்த சம்பவம் தீவகம், ஊர்காவற்றுறையில் உள்ள ஆலயங்களில் நடந்துள்ளது.

குறித்த இரண்டு ஆலய விக்கிரகங்களை மேலெழுப்பி அவற்றின் கீழ் இருந்த மோதிரம் மற்றும் பொற்காசு என்பற்றை பூசகர் திருடியிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவத்தில் கொக்குவிலைச் சேர்ந்த 27 வயதுடைய பூசகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட பூசகர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் கைது செய்யப்பட்டவரிடமிருந்து 5 பவுண் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.இந்தக் கைது நடவடிக்கையை பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப்பின் குழுவே மேற்கொண்டுள்ளனர்.