76 வயதுடைய தாயை அடித்து கொன்ற மகன்..!

தாயை மகன் ஒருவர் இரும்பு கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் ஒன்று அலவ்வ பிரதேசத்தில் பதிவகியுள்ளது. குறித்த நபர் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று மாலை 6 மணியளவில் அலவ்வ மாபோபிட்டிய பிரதேசத்தில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதே பகுதியில் வசித்து வந்த 76 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சந்தேகநபரின் தாக்குதலால் தாய் வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரின் மகன் மாபோபிட்டிய பிரதேசத்தில் மறைந்திருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.