கொழும்பில் ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றுகூடிய குழுவினர்..!

டெலிகொம் வளங்களை விற்பனை செய்வதற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்று கொழும்பில் இன்று இடம்பெற்றுள்ளது.இலங்கை அரசாங்கம் மற்றும் டெலிகொம் தலைமை நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெலிகொம் ஊழியர்களால் இன்று இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருகைத் தந்த டெலிகொம் ஊழியர்களால் டெலிகொம் தலைமையகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.இதன்போது, இந்த வருடத்திற்கான போனஸ் கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளமை மற்றும் போனஸ் கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளமை உள்ளிட்டவற்றிற்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.ஆர்ப்பாட்டத்தின்போது, பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன், நீர்த்தாரைப் பிரயோக வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.