வெளிநாடு செல்லவிருக்கும் மக்களுக்கு மகிழ்ச்சித்தகவல்..!

நாட்டின் மூன்று இடங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிலையங்களை நிறுவுவது தொடர்பான வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதன்படி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு துரிதப்படுத்தப்பட்ட மற்றும் செல்லவுள்ள நாட்டை இலக்காக கொண்டு சிறப்பு பயிற்சி திட்டங்களை நடத்துகிறது.

இந்நிலையில் தற்போது நாடளாவிய ரீதியில் வாடகைக்கு பெறப்பட்ட கட்டிடங்களில் குறைந்தபட்ச வசதிகளின் கீழ் இந்தப் பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.அந்தவகையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கீழ் யாழ்ப்பாணம், ஹோமாகம மற்றும் அம்பாறை ஆகிய இடங்களில் பயிற்சி நிலையங்களை நிறுவ அமைச்சர் முன்மொழிந்துள்ளார்.