வயல்வெளியிலிருந்து 34 வயதுடைய நபர் ஒருவரின் சடலம் மீட்பு..!

டிசம்பர் 23, 2023 அதாவது இன்று ஆண் ஒருவரின் சடலம் திருகோணமலை-நாமல்வத்தை வயல்வெளியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கிண்ணியா – குறிஞ்சாங்கேணி பகுதியில் திருகோணமலை கடற்படையில் சிவில் உத்தியோகத்தராக பணிபுரியும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரபீக் முகமது முஸம்மில் (வயது 34) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கிண்ணியாவிலிருந்து நாமல்வத்தை பகுதியில் உள்ள வயலுக்கு புல் வெட்டுவதற்காக வருகை தந்தவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.