எண்ணெய் போத்தலால் உயிரை விட்ட இளைஞன்..!

நாவலப்பிட்டி கோரக்காஓயா பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய மொஹமட் ஆசாத் எனும் இளைஞன் ஒருவர் படிக்கட்டில் இருந்து தவறிவிழுந்து உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த இளைஞன் வீட்டிற்கு தேங்காய் எண்ணை வாங்குவதற்காக அருகில் இருந்த கடைக்கு செல்ல ஆயத்தமாகும் போது வீட்டின் மாடிப்படியில் இருந்து தவறி வீழுந்தபோது அவர் கையில் இருந்த தேங்காய் எண்ணெய் போத்தல்உடைந்ததில் அவரது கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் உடனடியாக குறித்த இளைஞர் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்தவரின் சடலம் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.