தொலைபேசி, இணையம் மற்றும் தொலைக்காட்சி சேவைக் கட்டணங்கள் மீண்டும் அதிகரிப்பு..!

VAT வரி அதிகரிப்புக்கு ஏற்ப ஜனவரி மாதம் முதல் கையடக்க தொலைபேசி, நிலையான தொலைபேசி, இணையம் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றுக்கான சேவைக் கட்டணங்கள் அனைத்தையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.குறித்த சேவைக் கட்டண திருத்தங்கள் ஜனவரி 01 முதல் அமலுக்கு வரும் என தொலைபேசி நிறுவனங்கள் அறிவித்துள்ளது.இந்த கட்டண உயர்வு குறித்து சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனங்கள் விரிவான தகவல்களையும் வெளியிட்டுள்ளன.