அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது..!

இவ்வருடம் செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பல்வேறு அனர்த்தங்களினால் பணிக்கு செல்ல முடியாத அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இவ்வாறு, பல்வேறு மாகாணங்களில் மழை, வெள்ளம், மண்சரிவு, வீதித் தடைகள் போன்றவற்றால் ஏற்படும் போக்குவரத்து சிரமங்கள், இடப்பெயர்வுகள் மற்றும் அனர்த்தங்கள் காரணமாக தமது கடமை நிலையங்களுக்குத் செல்ல முடியாத அரச உத்தியோகத்தர்கள் இந்தச் சலுகையைப் பெறுகின்றனர்.

பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கே.டி.என்.ரஞ்சித் அசோக விடுத்துள்ள சுற்றறிக்கையில், இந்த விடுமுறையை விடுமுறையை பெற்றுக் கொள்வதற்காக வதிவிட கிராம அதிகாரியின் சிபாரிசுடன் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.