நாட்டில் மூன்றாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது..!

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் நேற்று (29) உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மதவாச்சி பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுவாசக் கோளாறு காரணமாக மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.உயிரிழந்த பெண்ணுக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இலங்கையில் பதிவான மூன்றாவது கொரோனா மரணம் இதுவாகும்.