புத்தாண்டிற்கு வீட்டிற்கு சென்ற மகளுக்கு காத்திருந்த சோகம்..!

புத்தாண்டு தினமான நேற்று பிற்பகல் கொஸ்லந்த, வேலன்விட வீடொன்றின் தோட்டத்தில் வயோதிப தம்பதியினரின் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். வயோதிபப் பெண்ணின் சடலம் வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது,மேலும், வீட்டிற்கு மின்சாரம் வழங்கும் மின்சார கம்பியின் இரண்டு துண்டுகளை பிடித்துக் கொண்டு உயிரிழந்துள்ளதாகவும், உடல் மிகவும் அழுகியதாகவும் துர்நாற்றம் வீசுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மற்றைய முதியவரின் சடலம் வீட்டின் நுழைவாயிலுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது.கொஸ்லந்த வேலன்விட்ட அகர சியாவில் வசித்து வந்த ஆர்.டி.விமலாவதி என்ற 63 வயதுடையவர் மற்றும் உதநிலமேகெதர குணதாச என்ற 70 வயதுடைய ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குறித்த வீட்டில் வயோதிப தம்பதியினர் மாத்திரமே இருந்ததாகவும், வெல்லவாய பிரதேசத்தில் வசிக்கும் மகள் ஒருவர் புத்தாண்டை முன்னிட்டு நேற்று பெற்றோரை பார்க்க வந்த போது தாய் தந்தையரின் சடலங்களை கண்டெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.