வற் வரி தொடர்பில் பொய்யான அறிக்கை வெளியிடுவோருக்கு கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்..!

வ‌ற் வரி குறித்த தவறான தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.வற் வரிக்கு தொடர்பில்லாத தகவல்களை உருவாக்கி மக்களைத் தூண்டி விடுபவர்களுக்கு எதிராக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வரி சீர்திருத்தம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, மக்கள் வரி சீர்திருத்தத்தை சரியாக புரிந்துகொள்வது மிகவும் அவசியம் என தெரிவித்தார்.