காதலை தவிர்த்ததால் காதலிக்கு ஏற்பட்ட சோகம்..!

பிலியந்தலை பிரதேசத்தில் தனது காதலியுடன் ஏற்பட்ட முரண்பாட்டில் காதலன் தனது காதலியை கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ள சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் தொடர்பில், கொலைக்கு பயன்படுத்திய கத்தியுடன் 24 வயது இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த 26 வயதான ஜே.எம். ஆயிஷா லக்மினி என்ற யுவதியே கொலை செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட யுவதி தனது தாய், தந்தை மற்றும் சகோதரனுடன் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் பிலியந்தலை பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்ததாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.சந்தேகநபரான காதலனுடன் கொல்லப்பட்ட யுவதி சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் காதல் உறவில் இருந்த நிலையில், பின்னர் கடந்த மூன்று மாதங்களாகத் தனது காதலனைத் தவிர்த்து வந்தமை சந்தேகநபரின் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளதாகவும் பிலியந்தலை பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.