கையடக்க தொலைபேசிகளை வாங்குபவர்களுக்கான முக்கிய அறிவித்தல்..!

கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்யபவர்களுக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கையடக்க தொலைபேசிகளை மாத்திரமே கொள்வனவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு கையடக்கத் தொலைபேசி வாங்குவோருக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பின் பிரகாரம் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.நுகர்வோர் மோசடிக்கு பலியாவதைத் தடுக்க சர்வதேச மொபைல் சாதன அடையாள IMEI எண்ணைச் சரிபார்க்குமாறு ஆணைக்குழு மக்களை வலியுறுத்தியுள்ளது.

MEI எண் என்பது “சர்வதேச மொபைல் சாதன அடையாள எண்” ஆகும்.இது அனைத்து கையடக்க தொலைபேசிகளுக்கும் ஒதுக்கப்பட்ட தனித்துவமான 15 இலக்க எண்ணாகும்.IMEI என டைப் செய்து (இடைவெளி விட்டு) 15 இலக்கங்கள் கொண்ட IMEI எண்ணை 1909இற்கு அனுப்புவதன் மூலம் IMEI எண்ணின் செல்லுபடியை சரிபார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அப்போது குறித்த கையடக்க தொலைபேசி பதிவு செய்யப்பட்டதா இல்லையா என உடனடி பதில் செய்தி வரும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.