கடைசியில நடிகர் விவேக் சொன்னத சமந்தா நிருபிச்சிட்டாங்க..!

நடிகை சமந்தா தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். இவர் கடைசியாக நடித்த குஷி படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.தென்னிந்திய படங்கள் தவிர ஹிந்தி மற்றும் ஹாலிவுட் வெப் சீரிஸிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.ஆம், சிட்டாடல் வெப் தொடரிம் இந்திய பதிப்பில் கதாநாயகியாக சமந்தா நடித்து வர, வருண் தவான் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த வெப் தொடர் விரைவில் வெளிவரவுள்ளது.சமந்தாவின் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வைரலாகி வரும்.

மற்றும் நிச்சயமாக அவரது கவர்ச்சி புகைப்படங்கள் என்றால் சொல்லவே தேவயில்லை.இவரது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.காரணம் மறைந்த நடிகர் விவேக் நடிகர் ஷாம் உடன் சேர்ந்து 2003 வெளியான “அன்பே அன்பே” திரைப்படத்தில் நடித்திருந்தார்,அத் திரைப்படத்தில் நடிகர் விவேக் தனது ஆடைக்கு ஊக்கு(Pin) பலவற்றை குத்தி அழகுபடுத்தியிருப்பார்.அதற்கு நடிகர் மணிவண்ணன் “ஏங்க நாலுனா நூலவாங்கி தைக்குறதுக்கு 40 ரூபா குடுத்து ஊக்கு(Pin) வாங்கி குத்தியிருக்கிங்க..” என்று கூற.அதற்கு விவேக் இது தான் இப்ப ஸ்டைல் என்று கூறியிருப்பார்.

அதே போல் தற்போது நடிகை சமந்தா வெளியிட்ட புகைப்படத்தில் போட்டிருந்த ஆடையில் பலவகையான ஊக்கு(Pin)கள் குத்தப்பட்டு அந்த ஆடை வடிவமைக்கப்பட்டிருந்தது.இதை பார்த்த ரசிகர்கள் இது நடிகர் விவேக்கை நினைவு படுத்துகிறது என கமெண்ட் செய்துவருகின்றனர்.