புளியில் ஒளிந்திருக்கும் மருத்துவ குணங்கள்.!!

சமையல் என்பது தமிழர் வாழ்வின் ஓர் அங்கம். புளி இந்த சமையலில் இன்றியமையாத பகுதியாகும்.இந்த புளி இல்லாமல், கிட்டத்தட்ட எந்த உணவையும் சுவையாக தயாரிக்க முடியாது.புளி சமையலில் இன்றியமையாத பொருளாக எப்படி மாறியதோ மாறியதோ , அது போல் நமக்கு பல உடல் ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.செரிமானத்தைத் தூண்டுவதிலும், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவதிலும் புளி முக்கியப் பங்காற்றுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 

புளியில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்களை அறிந்து கொள்வது அவசியமாகும்.புளியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, ஃபிளாவனாய்டுகள், கரோட்டின்கள் மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் உதவுகிறது.

புளியில் பொட்டாசியம் நிறைந்துள்ளது மற்றும் இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தவும், திரவங்களை சமநிலைப்படுத்தவும் பயன்படுகிறது.புளியில் ஃபிளாவனாய்டுகள் போன்ற பாலிபினால்கள் உள்ளன. இவை கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவும்,மேலும் ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவும் மெக்னீசியம் அதிகமாக உள்ளது.புளியை உணவில் சேர்த்து கொள்ளும் போது, பூஞ்சை எதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கும்.சட்னி முதல் கறி வரை, புளி உணவுகளுக்கு சுவை சேர்க்கிறது. கூடுதலாக, இது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டியாகும்.