யாழ் பொலிஸ் நிலையம் மீது பெற்றோல் குண்டுவீச்சு..!இருவர் கைது..!!

யாழ்ப்பாணம் மண்டைதீவு சந்தியில் உள்ள பொலிஸ் நிலையம் மீது நேற்று புதன்கிழமை (10) இரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குண்டை வீசிவிட்டு தப்பியோடிய இருவரையும் பொலிஸார் விரட்டிச் சென்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மண்டைதீவு மற்றும் ஊர்காவற்துறையை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான , இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.யாழ்ப்பாணத்தையும் தீவகத்தையும் இணைக்கும் மண்டைதீவு சந்தியில் பொலிஸ் நிலையம் இருப்பதால் தீவுப் பகுதிகளில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோத இறைச்சி மற்றும் போதைப்பொருள் கடத்தல் கட்டுப்படுத்தப்பட்ட‌ நிலையிலேயே பொலிஸ் நிலையம் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.