பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்தியசாலையில் ஊழியர்கள் போராட்டம் !

இன்று வியாழக்கிழமை (11) காலை 10.00 மணியளவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வைத்தியசாலை நுழைவாயிலுக்கு முன்பாக‌ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பள உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறையை தீர்ப்பது, வாழ்வாதாரத்தினை உயர்த்துவது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து 30 நிமிடம் அமைதியான முறையில் இந்த போராட்டத்தை நடத்தினர்.வைத்தியசாலை சிற்றூழியர்கள் சுகயீன விடுமுறை வழங்கி கடமையிலிருந்து விலகி குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.