இவங்க தான் நடிகர் பொன்னம்பலத்தோட மகளா..?இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!

90களில் அதிகபடங்களில் வில்லனாக நடித்து தனக்கென்று ஒரு பெயரை நிலை நாட்டி வைத்திருந்தவர் தான் நடிகர் பொன்னம்பலம்.இவருடைய நடிப்பை பற்றி சொல்லவே தேவையில்லை.அதற்கு எடுத்து காட்டாக இவர் திரையில் கூறிய “அடியே தாய் கிழவி..” என்ற வசனம் இன்றுவரை பேஸ்புக்,டுவிட்டர் போன்ற சமூகவலித்தளங்களில் மீம்ஸ் மூலம் வந்த படியே இருக்கிறது.முரட்டுத்தனமான தோற்றத்தில் இருப்பதாலேயே வில்லன் கேரக்டருக்கு அவரது உடல் தோற்றம் பொருத்தமாக இருந்தது என்று கூட சொல்லலாம்.

ஆனால் இயல்பிலேயே அவர் குடும்பத்தில் மென்மையான குழந்தை குணம் கொண்டவர். அவர் நடிக்கும் கேரக்டருக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நல்ல உள்ளம் கொண்ட நடிகர்.இப்போது திரைஉலகில் இல்லாத வில்லன் பொன்னம்பலம் பிக்பாஸ் போட்டியாளராக இருந்தார் என்பது யாவரும் அறிந்ததே.இவருக்கு இடையில் ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக எதிலும் அதிகம் தலை காட்டாமல் இருக்கும் இவருக்கு சில முக்கிய சினிமா துறை பிரபலங்கள் உதவி செய்ததை அடுத்து தற்போது உடல்நிலை தேறி திரும்புகிறார்.

இந்த நிலையில் நடிகர் பொன்னம்பலம் தன்னுடைய குடும்பத்தோடு எடுத்து கொண்ட‌ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.குறிப்பாக பொன்னம்பலத்தின் மகளின் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து அடுத்த ஹீரோயினாக வருவதற்கு ஏற்ற தகுதிகளை கொண்டுள்ளார், இது உங்களுடைய மகளா,உங்கள் மகள் எவ்வளவு அழகாக இருக்கிறாள் என்று கருத்துக்களை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.