பாடசாலை மாணவன் சக மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம்..!மாணவன் கைது..!!

அலதெனிய பொலிஸாரால் கண்டி – நுகவெல பகுதி பாடசாலை ஒன்றி மாணவன் ஒருவன் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.16 வயதுடைய வரெல்லகம பிரதேசத்தை மாணவன் ஒருவரே சம்பவத்தில் கைதாகியுள்ளார். கைது செய்யப்பட்ட மாணவன், பாடசாலையில் சக மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விநியோகிப்பது தெரியவந்ததையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது பிடிபட்டார்.

இதன்போது சந்தேக நபரிடத்திலிருந்து 6 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதான சந்தேக நபர் கலகெதர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக அலதெனிய பொலிஸார் தெரிவித்தனர்.