கல்வித்துறையில் ஏற்படும் மோசடி..!!கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த வழங்கியுள்ள எச்சரிக்கை.!

நாட்டில் மேலதிக‌ வகுப்புகளுக்கு அதிக மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கு சமூக ஊடகங்களில் பரீட்சை வினாத்தாள்களை வெளியிடும் ஆசிரியர்களை ஆராய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.இவ்வருட உயர்தரப் பரீட்சையின் இரண்டாவது விவசாயப் பாட வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் வெளியானது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னரும் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன,இருப்பினும் தற்போதுள்ள போட்டிகளின் அடிப்படையில் சில ஆசிரியர்கள் இது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.இது பாரதூரமான விடயம் என்பதால் அவர்களுக்கு எதிராக பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.இதேவேளை, இவ்வருட விவசாய உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் வெளியானமை தொடர்பில் இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.