கொழும்பு உட்பட மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை..!!

நாடு முழுவதும் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது
அதன்படி, கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் காற்று நீரோட்டங்கள் நாடு முழுவதும் கடந்து செல்வதே இதற்குக் காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.சுவாச நோய் அல்லது நுரையீரல் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் இருப்பின் முகக்கவசம் அணியுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.