அடையாளம் தெரியாமல் வளர்ந்து போய் இருக்கும் வீரம் பட குழந்தை நடச்சத்திரம்..!!

2014 இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் மற்றும் தமன்னா வேறு பல சினிமா நட்சத்திரங்களின் நடிப்பில் வெளிவந்த படம் தான் வீரம்.இது பல ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட படமாக அமைந்திருந்தது.அண்ணன் தம்பி பாசம் மற்றும் குடும்ப வாழ்க்கை என்பவற்றை உள்ளடக்கிய கதைக்களமாக அமைந்திருந்தது.இதில் குழந்தை நட்சத்திரமாக யுவினா பார்த்தவி என்ற 6 வயது பெண் குழந்தை ஒருவர் நடித்திருப்பார்.சிறியவயதிலேயே தனது சுட்டிதனமான நடிப்பைக்காட்டி ரசிகர் மத்தியில் விரும்பும் குழந்தை நட்சத்திரமாக மாறிவிட்டார்.

அதை தொடர்ந்து அரண்மனை,காக்கி சட்டை ,மாஸ் / மாசு என்கிற மாசிலாமணி மற்றும் சர்க்கார் உள்ளிட்ட பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் யுவினா.அதன் பின் 2018க்கு பிறகு குழந்தை நட்சத்திரமாக நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.

2018 க்கு பின் திரைக்குவராத யுவினா தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றார்.தற்போது பொங்கல் கொண்டாடி இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை யுவினா தனது இன்ஸ்டாபக்கத்தில் பதிவிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் வீரம் படத்தில் நடித்த குழந்தையா இது என்று வாயடைத்து போய் உள்ளார்கள்.மற்றும் யுவினாவின் புகைப்படத்திற்கு ஏகப்பட்ட கமெண்ட்களையும் லைக்குகளையும் அள்ளி கொடுத்த வாறு இருக்கின்றார்கள் ரசிகர்கள்.