ஆண்களை பார்க்கும் போது நான் அவர்களிடம் அதை தான் முதலில் பார்ப்பேன்..!!நடிகை கிரண் ஓப்பன் டாக்..!

ஜெமினி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண். முதல் படத்திலேயே தனது இளமை வசீகரத்தால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். அவருக்கு ஜோடியாக‌ சியான் விக்ரம் நடித்திருந்தார்.இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படம் வெளியானதும் “ஓ போடு” பாடல் ட்ரெண்டிங்கானது.இப்படத்தில் கலாபவன் மணி வில்லனாக நடித்திருப்பார் இதில் அவரது நடிப்பும் ரசிகர்களிடம் பலத்த கைதட்டலை பெற்றது.

தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் பிரசாந்த் ஜோடியாக கிரண் நடித்திருந்தார். அந்த படத்தில், எந்த கதாநாயகியும் காட்டாத அளவுக்கு உடலின் கவர்ச்சி பாகங்களை அப்படியே காட்டி, படம் பார்க்க வந்த பெண்களையே முகம் சுளிக்க வைத்தார். இதில் வருத்தப்படாத வாலிபர் சங்க வடிவேலு காமெடி பிரமாதமாக ஒர்க் அவுட் ஆனது.இந்தப் படங்களுக்குப் பிறகு அன்பே சிவம் போன்ற சில படங்களில் நடித்தார் கிரண். ஆனால் எதிர்பார்த்தபடி தமிழில் மார்க்கெட் இல்லை. இருப்பினும், தனது ரசிகர்களை மகிழ்விக்க, அவர் தனது எல்லை தாண்டிய கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் சோஷியல் மீடியாவில் வெளியிட்டுவருகிறார்.இவரது வீடியோக்கள், போட்டோக்கள் பெரும்பாலும் ஆண் ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் விதமான அட்ராசிட்டியில் தான் இருக்கின்றன. இவருக்கு என்று சமூகவலைதளங்களில் தனி ரசிகர்கள் கூட்டமும், பல ஆயிரக்கணக்கில் பீஸ் கட்டி இரவு முழுவதும் பேசவும், அவரது லைவ் வீடியோ காணவும் வாடிக்கையாளர் கூட்டமும் இருக்கிறது.

பொதுவாக, ஒரு பெண்ணைப் பார்த்தாலே முதலில் பார்ப்பது அவளுடைய முன் அழகைத்தான் என்று ஆண்கள் சொல்வார்கள். அதேபோல் ஆண்களை கண்டால் முதலில் அவர்களின் புஜத்தை தான் பார்ப்பேன் என நடிகை கிரண் வெளிப்படையாகவே கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் தற்போது பரவலாக பேசிவரும் விடயமாக மாறியிருக்கிறது.