பதிவுசெய்து வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு கிடைக்கும் பிரதிபலன்கள்..!

வெளிநாட்டு வேலைவாய்ப்பில் உள்ள சுமார் 3 மில்லியன் இலங்கையர்களில் 1.2 வீதமானவர்கள் மாத்திரமே வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் பதிவு செய்யாமல் சட்டவிரோதமாக வெளிநாடு செல்பவர்கள் வெளிநாடுகளில் தொழில் செய்யும் போது பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கண்டியில் மல்வத்து, அஸ்கிரிய மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தம்மைப் பதிவுசெய்து வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு காப்புறுதி பாதுகாப்பு கிடைப்பதுடன், பெரும்பாலான பிரதிபலன்களும் உரித்தாகுகின்றன.சில தரப்பினர் நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்படாது தவறான முறைமையின் மூலம் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.இதனால், அவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதில் அமைச்சு பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க நேர்கிறது.எவ்வாறாயினும், இலங்கையர்கள் வெளிநாட்டில் வேலை தேடிச் சென்று அங்கு பாதிப்புகளை சந்தித்தால், அவர்கள் தொடர்பான உரிய நடவடிக்கை எடுப்பதில் அமைச்சு கவனம் செலுத்தும்.மூன்று மில்லியன் பேர் வெளிநாட்டில் பணிபுரிந்தாலும், அவர்கள் அனுபவிக்கும் பாதிப்புகள் குறித்து ஆயிரத்திற்கும் குறைவான முறைப்பாடுகளே கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.