சவூதி அரேபியா வீட்டுப்பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு கட்டணம் தொடர்பில் புதிய தீர்மானம்.!!

இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான கட்டணத்தை குறைக்க சவுதி அரேபியா தீர்மானித்துள்ளது.பிலிப்பைன்ஸ், இலங்கை, பங்களாதேஷ், உகாண்டா, கென்யா மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யும் நிறுவனங்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபிய மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சினால் இந்த கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இலங்கையில் இருந்து ஒரு வீட்டுப் பணியாளரை வேலைக்கு அமர்த்துவதற்கான கட்டணத்தை 15,000 சவூதி அரேபிய ரியால்களில் இருந்து 13,000 சவூதி அரேபிய ரியால்களாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபியாவின் மனித வளங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.ஆட்சேர்ப்புத்துறையில் ஏற்பட்டுவரும் செலவுகளுக்கு ஏற்ப இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.