அந்த மாதிரி காட்சியில நடிக்கும் நடிகர்களோட மன நிலை இப்புடித்தான் இருக்கும்..!!வெளிப்படையாக பேசிய நடிகை தமன்னா..

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா.இவர் நடிப்பில் கடந்த மூன்று வருடங்களாக தமிழில் எந்தப் திரைப்படமும் வெளிவரவில்லை.இருப்பினும் அண்மையில் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு நடனம் ஆடி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் நடனம் ஆட வைத்துவிட்டார்.

நடிகை தமன்னா தற்போது ஒரு நேர்காணலில், நடிகர்களுடன் நெருக்கமான படுக்கையறை காட்சிகளின் போது நடிகர்களின் உணர்வு எப்படி இருக்கும் என்பதைப் பற்றி பேசியுள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில் “நடிகர்களுக்கு நெருக்கமான காட்சிகள் பிடிக்காது..”,மாறாக நடிகையை விட அவர்கள் மிகவும் பதட்டமாகவும் சங்கடமாகவும் இருப்பதை நான் அதிக தடவை பார்த்திருக்கிறேன்” என கூறினார்.மேலும் ‘ நடிகை என்ன நினைப்பார்கள் என்று நடிகர்கள் கவலைப்படுவார்கள். இதெல்லாம் மிகவும் விசித்திரமாக இருக்கும். நடிகர்கள் மனதில் பல கேள்விகள் எழும்’ என தமன்னா கூறியுள்ளார். இவருடைய இந்த பேச்சு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.