இலங்கையர்களுக்கும் இந்த வருடம் முதல் இலத்திரனியல் கடவுச் சீட்டு..!!

இந்த வருடம் தொடக்கம் இலங்கையில் இலத்திரனியல் கடவுச் சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.குடிவரவு மற்றும் குடியகல்வு கல்வித் திணைக்களத்தின் பணிப்பாளர் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் அனைத்து முதல் நடவடிக்கைகளும் முடிந்துவிட்டதாக அறிவித்தார்.இந்நிலையில் இ-பாஸ்போர்ட்களை (E-PASSPORT) அறிமுகம் செய்வதற்கான கொள்முதல் நடவடிக்கையை தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.