பொலிஸாரின் தவறுதலான துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகிய லொறி சாரதி..!!

குருநாகல், நாரமல்லவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தற்செயலாக ஆயுதம் பிரயோகித்ததில் லொறி சாரதி ஒருவர் உயிரிழந்ததையடுத்து அப்பகுதியில் நேற்று இரவு பதற்றம் ஏற்பட்டது.இந்த சம்பவத்தையடுத்து, அப்பகுதியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலையேற்பட்டதைஅந்த பகுதிக்கு விசேட அதிரடிப்படையினர் அனுப்பப்பட்டனர்.பொலிஸ் சோதனைச் சாவடியில் வாகனத்தை நிறுத்துமாறு பொலிஸாரின் கோரிக்கையை சம்பந்தப்பட்ட சாரதி நிராகரித்ததாக பொலிஸ் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.இதன் பின்னர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் லொறியை துரத்திச்சென்று அதனை தடுத்து நிறுத்த முயன்றவேளை அவரது துப்பாக்கி தவறுதலாக வெடித்தது என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.கடும் காயங்களிற்குள்ளான லொறிச்சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபின்னர் உயிரிழந்தார்.