கழிவுவாய்க்கால் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 33 வயது இளைஞன்..!!கிளிநொச்சி பொலிஸார் மேலும் விசாரணையில்..

இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி பாடசாலைக்கு முன்பாக உள்ள கழிவு வாய்க்கால் ஒன்றிலிருந்து அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.இறுதியாக குறித்த நபர் நேற்று இரவு 7 மணியளவில் மக்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இந்நிலையில், குறித்த இளைஞன் இன்று(20) காலை சடலமாக காணப்படுவது அவதானிக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.மருதநகரைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞரே மேற்படி சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் சம்பவ இடத்தில் நீதவான் விசாரணைகளின் பின்னர் குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணையின் பின்னர் இளைஞனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.