இன்று காலை மாத்தறை பகுதியில் நடந்த பயங்கரம்..!! 5 பேருக்கு ஏற்ப்பட்ட பரிதாபம்..!

இன்றைய தினம் காலை (22-01-2024) மாத்தறை – பெலியத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.குறித்த சம்பவம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கெப்ரக வாகனத்தில் பிரவேசித்தவர்கள் டிபெண்டர் ரக வாகனத்தில் பயணித்தவர்களை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் தப்பிச் சென்றதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.மேலும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்னர் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.