எனக்கு அத பிடிக்க சொல்லி குடுத்ததே அவர்தான்..!!நடிகை பிரியங்கா மோகனை கலாய்த்த ரசிகர்கள்..!

நடிகை பிரியங்கா மோகன் தற்போது திரை உலகில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தது மட்டும் இல்லாமல் பல ரசிகர் கூட்டத்தையும் தன் பக்கம் இழுத்துவிட்டார். கன்னட திரைப்படத்தின் மூலம் 2019 சினிமாக்கு
அறிமுகமானதையடுத்து தெலுங்கு படத்தில் நடித்திருந்தார் இதனை அடுத்து தமிழ் சினிமாவில் நடிக்க அதிக வாய்ப்பு கிடைத்தது.சிவகார்த்திகேயனின் நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் 2021 வெளிவந்த டாக்டர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாக்கு பிரியங்கா மோகன் அறிமுகமானார்.

இவர் தனது முதல் படத்தின் மூலமே தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார்.இதனை அடுத்து தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிய இவர் சூர்யாவோடு இணைந்து எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து முன்னணி தமிழ் நடிகையாக மாற முயற்சி செய்தார்.அந்த வகையில் இந்த படம் அதிகளவு வசூலை தந்ததை அடுத்து மீண்டும் சிவகார்த்திகேயனோடு இணைந்து டான் படத்தில் அழகான நடிப்பை வெளிப்படுத்திய இவர் சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடியவர்.இவர் சமீபத்தில் தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்தார். 2024ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வெளியான இந்தப் படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.ஹாலிவுட் அளவிலான சண்டைக் காட்சிகளுடன் வெளியான கேப்டன் மில்லர், பல்வேறு கதை கூறுகள் நிறைந்த படமாக அமைந்திருந்த‌து, ஆனால் ரசிகர்களால் இந்தப் படம் பெரிய வெற்றியைத் தரவில்லை.

இப்படத்திலும் பிரியங்கா மோகன் தீவிர நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இப்படத்தில் நடிக்கும் போது துப்பாக்கி கூட பிடிக்கத் தெரியாது என நடிகை பிரியங்கா மோகன் படத்தின் வெளியீட்டு விழாவில் கூறியது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான பேச்சை ஏற்படுத்தியது. தனக்கு துப்பாக்கியை பிடிக்க கற்றுக் கொடுத்தது நடிகர் தனுஷ் தான் என்று கூறியதை அடுத்து, அங்கு வந்திருந்த‌ சக நடிகர்கள் மேடைக்கு கீழே அமர்ந்து சிரித்து சிரித்துக்கொண்டிருக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது.இதைப்பார்த்த ரசிகர்கள் “ஐயோ புள்ளைய எப்புடி வளர்த்திருக்காங்க ஒன்னுமே தெரியாம இருக்கே..”என்று தமது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இந்த பதிவுகளை பார்த்த நடிகை பிரியங்கா மோகன் தன்னை ரசிகர்கள் அனைவரும் பங்கமாக கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள் என கூறியிருக்கிறார். மேலும் இவரது வெள்ளந்தி தானமான பேச்சு ரசிகர்கள் பலராலும் ரசிக்கும்படி உள்ளது என கூறலாம்.முதல் படத்திலிருந்து அடுத்தடுத்து தமிழ் படங்களில் முன்னணி நடிகர்களோடு நடித்து வரக்கூடிய பிரியங்கா மோகன் விரைவில் தமிழில் முன்னணி நடிகையாக கூடிய வாய்ப்புகள் அதிகளவு உள்ளது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பிரியங்கா மோகனின் வெள்ளந்தி பேச்சு பிரபலமாக பலர் மத்தியிலும் பேசக்கூடிய பேசும் பொருளாக மாறிவிட்டது.