போதைபொருளுக்கு அடிமையாகிய நபர்செய்த விசித்திர செயல்..!!

போதைக்கு அடிமையான ஒருவர் தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் குருணாகல் பஸ் நிலையத்திற்கு அருகில் நடந்துள்ளதாகவும் சம்பவத்துடன் தொடர்புபட்டவர் குருணாகல் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தன்வசம் போதைப்பொருள் இல்லாத காரணத்தினால் கழுத்து மற்றும் மார்பு பகுதிகளை கத்தியால் குத்தி தன்னைத்தானே காயப்படுத்தியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்த நபருக்கு எதிராக பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 13 குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.