பிள்ளைகளை தாக்கி அதனை காணொளியாக சமூக ஊடகங்களில் பதிவிட்ட தந்தை..!!

நேற்று புதன்கிழமை (7) அன்று இரு பிள்ளைகளை தாக்கி அதனை காணொளிகளாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட தந்தை திம்புள்ள – பத்தனை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.இரு பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய நபரே இவ்வாறு கைதாகியுள்ளார்.கடந்த 5ஆம் திகதி அவர் தனது 9 மற்றும் 5 வயதுடைய இரண்டு பிள்ளைகளையும் கடுமையாகத் தாக்கியுள்ளதாக‌ பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரின் மனைவி வேலை நிமித்தம் வெளிநாட்டிற்கு சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.இரண்டு பிள்ளைகளும் பாட்டியின் பராமரிப்பில் இருக்கும் நிலையில், சந்தேகநபரான‌ தந்தை கொழும்பில் உள்ள வாகன சுத்தம் செய்யும் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.அதேவேளை இரு பிள்ளைகளையும் பல தடவைகள் தாக்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.